கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் டும் டும்

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கிறார். அவருக்கு விரைவில் திருமணம் என தகவல் பரவி வருகிறது.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி அவர் ஹீரோயின் centric படங்களிலும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக மாமன்னன் படத்தில் அவர் நடித்து வருகிறார்.

திருமணம்
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டார் எனவும், விரைவில் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மாப்பிள்ளை ஒரு தொழிலதிபர் என்றும், அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாக இருந்தால் விரைவில் திருமணம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.