கடலுக்கடியில் போஸ்டர் வைத்த அஜித் ரசிகர்கள்

நடிகர் அஜித்தின் ரசிகர்கள் கடலுக்கு அடியில் பேனர் வைத்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜித்
நடிகர் அஜித் குமாருக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவர் ரசிகர் மன்றங்களை களைத்துவிட்டார் என்றாலும் அவரது ரசிகர் கூட்டம் அப்படியே தான் இருக்கிறது.

அஜித் பற்றி ஒரு சின்ன அப்டேட் வந்தால் கூட அதை பெரிய அளவில் வைரலாக்கிவிடுவார்கள்.

கடலுக்கடியில் போஸ்டர்
இந்நிலையில் அஜித் சினிமாவில் 30 வருடங்களை கடந்து இருக்கும் நிலையில் அதை கொண்டாட ரசிகர்கள் பல விஷயங்களை செய்து வருகின்றனர்.

தற்போது புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் சிலர் கடலுக்கு அடியில் இதற்காக பேனர் வைத்து கொண்டாடி இருக்கிறார்கள். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது