யாழ் மாவட்டத்திற்கான இன்றைய எரிவாயு விநியோகம் தொடர்பிலான அறிவித்தல்!

யாழ்ப்பாணத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு இன்றைய தினம் விநியோகிக்கப்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி யாழ்ப்பாணம், கோப்பாய், உடுவில் மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள எந்தெந்த கிராம சேவகர் பிரிவுகளில் எரிவாயு விநியோகிக்கப்படும் என்பது தொடர்பில் விளக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதிகளுக்கு எத்தனை எரிவாயு கொள்கலன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான விபரங்களும் தெரியப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை எதிர்வரும் 5ஆம் திகதி முதல் குறைக்கப்படுவதாக அண்மையில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.

உலக சந்தையில் நிலவும் எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.