எதிர்வரும் 9ஆம் திகதி நாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்படும்!-சரத் பொன்சேகா

எதிர்வரும் 9ஆம் திகதி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்து தொர்பில் பாதுகாப்பு தரப்பினர் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருடனான சந்திப்பின் போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போராட்டத்தின் இறுதி இலக்கை அடைய எதிர்வரும் 9ஆம் திகதி மக்கள் அணிதிரள வேண்டும் என்று அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டிருந்தார்.

இவரின் இந்தக் கருத்து பாரதூரமானது என்றும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய சந்திப்பின் போது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கூறியுள்ளனர்.