22 ஆவது பொது நலவாய நாடுகளின் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள சென்ற இலங்கை வீராங்கனையும் சிரேஷ்ட அதிகாரியும் மாயம்!

பிரிட்டன், , பேர்மின்ஹாமில் நடைபெறும் 22 ஆவது பொது நலவாய நாடுகளின் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள சென்ற இலங்கை அணியின் விளையாட்டு வீராங்கனை ஒருவரும் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் காணாமல்போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை ஜூடோ வீராங்கனை முதலாவது போட்டியில் கலந்துகொண்டு தோல்வியுற்றவுடன் இவ்வாறு காணாமற் போன நிலையில், அதன்பின்னர் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் காணாமற்போனது தொடர்பாக இலங்கை அணியின் முகாமைத்துவம் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதுடன் பேர்மின்ஹாம் மெட்ரோ பொலிட்டன் பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்தையடுத்து ஏனைய வீரர்,வீராங்கனைகளின் கடவுச்சீட்டுக்களை இலங்கை குழுவின் பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோ சேகரித்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை கொமன்வேல்த் விளையாட்டு போட்டிக்கு 10 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் 51 அதிகாரிகளும் இலங்கையில் இருந்து சென்ற குழுவில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.