மீண்டும் இளைஞர்களை கவரும் வகையில் புதிய போன்களை அறிமுகம் செய்யும் நோக்கியா

மீண்டும் இளைஞர்களை கவரும் வகையில், ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 8120 4ஜி மொபைல் போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

இதற்கு முன்னதாக நோக்கியா 2660 ப்ளிப் மற்றும் 5710 எக்ஸ்பிரஸ் ரேடியோ போன்ற மாடல்களுடன் நோக்கியா 8120 மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.

அந்த வகையில், புது நோக்கியா 8120 அதன் பழைய ஃபீச்சர் போனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அசத்தல் டிசைன், தலைசிறந்த உறுதித்தன்மை கொண்டிருக்கும் நோக்கியா 8120 மாடல் 4ஜி, வோல்ட்இ கனெக்டிவிட்டி, 2.8 இன்ச் டிஸ்ப்ளே, எளிய யூசர் இண்டர்பேஸ் கொண்டுள்ளது.

இத்துடன் டார்ச், வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, MP3 பிளேயர், கேம்லாஃப்ட் கேம்கள், ஒரிஜின் டேட்டா கேம்கள் பிரீலோட் செய்யப்பட்டு உள்ளன.

நோக்கியா 8120 4ஜி அம்சங்கள்
– 2.8 இன்ச் 320×240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே –

அதிகபட்சம் 1GHz யுனிசாக் T107 சிங்கில் கோர் பிராசஸர்

48MB ரேம் – 128MB மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி – டூயல் சிம் ஸ்லாட்

S30+ ஓ.எஸ். – விஜிஏ கேமரா – 3.5mm

ஹெட்போன் ஜாக் – வயர்லெஸ்

எப்.எம். ரேடியோ, MP3 பிளேயர்,

டார்ச் லைட் – 4ஜி வோல்ட்இஷ ப்ளூடூத் 5.0, மைக்ரோ

யுஎஸ்பி – 1450 எம்ஏஹெச் பேட்டரி

விலை விவரங்கள்
நோக்கியா 8120 4ஜி மாடல் டார்க் புளூ மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 999 ஆகும். விற்பனை அமேசான் மற்றும் நோக்கியா இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது.