ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதனை பட்டாசு கொழுத்தி கொண்டாடிய யாழ் மக்கள்

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றதனையடுத்து அவரது கட்சியின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் பட்டாசுகளை வெடிக்க வைத்து தமது சந்தோஷத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாண நகரில் இன்று(21) ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதிணை கொண்டாடும் வகையில் இந் நிகழ்வானது இடம்பெற்றுள்ளது.

உத்தியோகபூர்வ பதவி பிரமாணம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இன்று காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துகொண்டார்.

பிரதமர் பதவி
இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் கீழ் பிரதமர் பதவியை வகிக்க நால்வரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தினேஷ் குணவர்தன, விஜேதாச ராஜபக்ஷ, சரத் பொன்சேகா மற்றும் சுசில் பிரேம ஜயந்த ஆகியோரின் பெயர்கள் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.