இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வெற்றி!

பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 16-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் 222 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக சண்டிமால் 76 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 218 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபர் அசாம் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை தரப்பில் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

4 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 337 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சண்டிமால் 94 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் நவாஷ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரனான அப்துல்லா ஷபீக் 160 ரன்கள் குவித்தார்.

பாபர் அசாம் அரை சதம் அடித்து வெளியேறினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி 24-ந் தேதி தொடங்குகிறது.