இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இருந்து விலகிய விரட்கோலி

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட், டி20 போட்டி, ஒரு நாள் போட்டியை விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற, டி20 போட்டியில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

அடுத்து 3 ஒரு நாள் போட்டியை விளையாட உள்ளது. முதல் ஒரு நாள் போட்டி நாளை ஜூலை 12 ம் தேதி கென்னிங்டன் ஓவல், லண்டன் மைதனாத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.

புள்ளி விபரம்
ஒருநாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் வரலாற்றில் இதுவரை 103 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

அதில், 55 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது.இங்கிலாந்து 43 போட்டிகளில் வென்றுள்ளது. 2 போட்டிகள் டையில் முடிந்தன. 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது.

ஆனால், இங்கிலாந்து மண்ணில் நடைப்பெறும் போட்டியில் இந்திய அணி 42 போட்டிகளில் விளையாடி 16ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 22 போட்டிகளில் இங்கிலாந்து வென்றுள்ளது. 1 போட்டி டை, 3 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

அதிக ரன்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பார்ப்போம்.

ராகுல் டிராவிட் : 648 ரன்கள் (20 போட்டிகள்) 2. சச்சின் டெண்டுல்கர் : 639 ரன்கள் (17 போட்டிகள்) 3. எம்எஸ் தோனி : 613 ரன்கள் (21 போட்டிகள்)

பந்து வீச்சு
பந்துவீச்சை பொறுத்தவரை ரவிச்சந்திரன் அஸ்வின், 15 விக்கெட்கள், ரவீந்திர ஜடேஜா/ முகமது சமி, தலா 13 விக்கெட்கள், ஜஹீர் கான் 12 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.

விராட்கோலி காயம்
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபார்முக்கு திரும்ப போராடி வரும் விராட் கோலி க்க வேண்டும் என்று பல்வேறு தரப்பும் கோரிக்கை விடுத்தது. ஆனால், விராட் கோலிக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயிற்ச்சி ஆட்டத்திலும், கூட விராட் கோலி வரவில்லை. இதற்கு அவருக்கு ஏற்பட்ட காயம் தான் காரணம் என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கின்றன.

மேலும், ஒரு வேலை விராட் கோலி போட்டியில் பங்கேற்கவில்லை என்றால், ஸ்ரேயாஸ் ஐயருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

திரும்ப வர வேண்டும்
கடைசியாக விராட் கோலி விளையாடிய 11 சர்வதேச ஒருநாள் போட்டியில் 6 முறை அரைசதம் அடித்து இருக்கிறார். இதனால் இந்திய அணி அவரை தொடர்ந்து நல்ல ஃபார்முக்கு வர உதவி புரிவது கட்டாயமான ஒன்று.

ஏனென்றால், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற பெரிய அணிகளை சமாளிக்க விராட்கோலியால் மட்டுமே முடியும் என ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது.