ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவிற்கு வாழ்த்து கூறிய சச்சின்

இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் 378 ரன்களை இங்கிலாந்து அணி சேசிங் செய்து சாதனை படைத்தது. இரண்டாவது இன்னிங்சில் ஜானி பேர்ஸ்டோவ் – ஜோரூட் சதம் அடித்து அசத்தினர்.

இந்நிலையில் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவின் சிறப்பான பேட்டிங் ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- இந்திய அணிக்கு எதிரான சிறப்பான வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்துள்ளது.

ஜோரூட் -ஜானி பேர்ஸ்டோவ் சிறப்பான ஃபார்மில் இருந்து பேட்டிங்கை மிகவும் எளிதாக்கியுள்ளனர். உறுதியான வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். மேலும் ஒரு முன்னாள் வீரர் இருவரையும் பாராட்டியுள்ளார். இந்திய அணியின் தொடக்கக்காரரான வாசிங் ஜாபர் கூறியதாவது:- இரண்டு பேருக்கும் போதிய பாராட்டு இல்லை. ஜோரூட் இப்போது சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்.

ஆனால் ஜானி பேர்ஸ்டோவ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சவாலை எதிர்கொண்ட விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.