3 மாடல் ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்த ஒப்போ

ஒப்போ நிறுவனம் அதன் F19 ப்ரோ பிளஸ், A76 மற்றும் A54 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை இந்தியாவில் அதிரடியாக குறைத்துள்ளது. ஒப்போ நிறுவனம் அதன் F19 ப்ரோ பிளஸ் மாடலை கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

அப்போது இதன் விலை ரூ.25,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த மாடலின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி இதன் 8 ஜிபி ரேம் + 128ஜிபி ரேம் ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.6 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ.19,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கிரிஸ்டல் சில்வர் மற்றும் ஃபுளூயிட் பிளாக் ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது.

அதேபோல் ஒப்போவின் A76 மாடல் விலை ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது. இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி ரேம் ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை அறிமுகப்படுத்தும் போது ரூ.17,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த மாடல் ரூ.16,490-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர ஓப்போவின் A54 ஸ்மார்ட்போன் மாடலின் விலையும் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3 விதமான ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் அறிமுகமாகி இருந்தாலும், இதன் ஹை எண்ட் மாடலான 6ஜிபி ரேம் + 128ஜிபி ரேம் ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை மட்டுமே குறைக்கப்பட்டு உள்ளது. அறிமுகம் ஆகும் போது ரூ.15,990 ஆக இருந்த இதன் விலை தற்போது 4 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ.11,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.