வைரலாகும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் பட போஸ்டர்

ராகவா லாரன்ஸ், ருத்ரன், raghava lawrence, ruthranதமிழ் திரையுலகில் பல வெற்றிப் படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘ருத்ரன்’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், என பல மொழிகளில் வெளியாக இருக்கும் ருத்ரன் படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக மட்டும் ஒரு கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு வெளியான ருத்ரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் ருத்ரன் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கையில் மதுபாட்டில் வைத்தபடி ராகவா லாரன்ஸ் அமர்ந்திருப்பது போன்று இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனுடன் வருகிற டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.