சிவகார்த்திகேயனுடன் இணையும் பிரபல நடிகை!

மேலும் படிக்க சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வரும் ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தை இந்த வருட தீபாவளி தினத்தன்று திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து ‘மண்டேலா’ திரைப்படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கவிருக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் கதாநாயகிகளின் தேர்வு நடைப்பெற்றுவருவதாகவும் இதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி ஷெட்டியை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூர்யா 41’ படத்தில் நடித்து வருவதால் அதனை கருத்தில் கொண்டு கால்ஷீட் வழங்க வாய்ப்புள்ளது.