இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை!

இலங்கையில் மே 9ஆம் திகதி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தாக்குவதற்கு கைதிகளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டை விசாரிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.

இந்நிலையில் நியமித்த புலனாய்வாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான எந்தவொரு தாக்குதலின் போதும் கைதிகள் எவரும் சம்பந்தப்படவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

இதன்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையை நேற்று சமர்ப்பித்துள்ளது.