நாட்டில் மக்கள் புரட்சி வெடிக்கும் நிலையில்

மக்கள் புரட்சி வெடிக்கும் நிலைக்கு கொண்டு சென்று நாட்டில் இரத்தக் களரி ஏற்படுவதற்கு இடமளிக்காது, நெருக்கடி நிலைமைகளுக்கு காரணமான ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சரான 43ஆம் படையின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தின் நடவடிக்கைகளால் முழு தேசமும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக இன்று மாலை 4 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

பெருமளவிலான மக்களை வீதிக்கு அழைத்துச் செல்வதற்காக அனைத்து அரசாங்க எதிர்ப்பு செயற்பாட்டாளர்களுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் அது இரண்டாம் கட்ட மக்கள் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.