அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் எலும்பும் தோலுமாக மாறிய டி.ராஜேந்திரர்

டி.ராஜேந்தரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

நிஜமாவே இது டிஆர் தானா என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

டி.ராஜேந்தர் சமீபத்தில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் வயிற்றில் ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவரை மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்ல குடும்பத்தினர்கள் முடிவு செய்தனர்.

அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட டி.ராஜேந்தருக்கு அங்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.

எலும்பும் தோலுமாக மாறிய டி.ஆர்
அறுவை சிகிச்சைக்கு பிறகு அப்பா டி.ராஜேந்தர் மற்றும் அம்மா உஷா ராஜேந்தருடன் இருக்கும் புகைப்படத்தினை சிம்பு வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதேவேளை, அறுவை சிகிச்சைக்கு பிறகு டிஆர் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது