இலங்கையில் துப்பாக்கிச்சூடு!

மொரட்டுவ – கட்டுபெத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று(29) நண்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சுமார் ஒரு மாத காலப்பகுதியில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்களினால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்

இதில் அதிகளவான மரணங்கள் களனி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளன.

பேலியகொட

கடந்த 26 ஆம் திகதி இரவு பேலியகொட புகையிரத நிலைய வீதி பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இதன்போது, முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.