ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிரபல சீரியல் முடிவுக்கு வருகின்றது!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் இரண்டு புது சீரியல்கள் வர இருக்கிறது. அந்த இரண்டு தொடர்களையும் ப்ரைம் டைமில் தான் கொண்டு வர இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இரண்டு புது சீரியல்களுக்கும் நேரம் ஒதுக்குவதற்காக அன்பே சிவம் தொடர் திடீரென முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த வருட இறுதியில் தான் அன்பே சிவம் சீரியல் ஒளிபரப்பை தொடங்கியது. விவாகரத்து ஆன ஹீரோயின், அவரை போலவே விவாகரத்து ஆன ஹீரோ.. இருவருக்கும் நடுவில் தான் கதை.. என ஆரம்பத்திலேயே கவனம் ஈர்த்தது அன்பே சிவம் சீரியல்.

முடிகிறது அன்பே சிவம்?
அன்பே சிவம் தொடரில் முதலில் நடிக்க தொடங்கிய ரக்ஷா ஹொல்லா திடீரென நீக்கப்பட்டார். அவர் உடல் எடை அதிகரித்து திரையில் குண்டாக தெரிந்ததால் தான் நீக்கப்பட்டார் என செய்தி பரவியது. அதற்கு பிறகு சில நடிகர்களும் இந்த சீரியலில் மாற்றப்பட்டனர்.

2021ல் அக்டோபர் 18 தொடங்கியா இந்த தொடர் தற்போது 214 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகி இருக்கும் நிலையில் அடுத்த வாரத்தோடு முடிக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.