அறுவை சிகிச்சையினால் உயிரிழந்த பிரேசில் அழகி..

2018-ஆம் ஆண்டு, மிஸ் பிரேசில் பட்டம் வென்றவர் கிளெய்சி கொரிய்யா (29). இவர் தென்கிழக்கு நகரமான மெகேயில் நிரந்தர ஒப்பனை நிபுணராக பணியாற்றி வந்தார். இவர் தனது தொண்டையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அண்மையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கிளெய்சி கொரிய்யா அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஐந்து நாட்களில் திடீரென உடல்நிலை மோசமாகி மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவை இழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கிளெய்சி கொரிய்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனையை விசாரிக்க வேண்டும் எனவும் கிளெய்சியின் குடும்பத்தினர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கிளெய்சி கொரிய்யாவின் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும், அவரது மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.