வீதியை கடக்க முற்ப்பட்ட ராணுவ அதிகாரியை மோதித் தள்ளிய பிக்கப் வாகனம்

வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட இராணுவ வீரர் மீது பிக்கப் வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் விடுமுறையில் வீடு சென்று இ.போ.சபை பேருந்தில் மீண்டும் கடமைக்கு திரும்பியுள்ளார்.

இதன் போது வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் ஆவணம் ஒன்றை ஒப்படைப்பதற்காக பேருந்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட போது எதிர் திசையில் வந்த பிக்கப் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இராணுவ வீரரை மோதியுள்ளது.

இதன்போது இராணுவவீரர் 7 மீற்றர் தூரம் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து விட்டடதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பில் ஈரப்பெரியகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.