மீண்டும் இந்தியாவிடம் கடன் வாங்கும் இலங்கை!

இந்திய கடன் மூலம் இதுவரை சுமார் 4 பில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாங்கள் இந்தியாவிடமிருந்து அதிக கடன்களைக் கேட்டுள்ளோம். ஆனால் இந்தியா எங்களுக்கு தொடர்ந்து கடன் கொடுக்க முடியாது.

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அமைப்பை நாங்கள் வகுக்க வேண்டும்

. ஆனால், கொடுப்பது பற்றி விவாதிக்க யாரும் எங்களுக்கு பணம் தருவதில்லை என பிரதமர் ரணில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.