வைரலாகும் கவின் பட பாடல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் கவின். நட்புனா என்னானு தெரியுமா படத்தின் மூலம் கதாநாயனாக மாறினார். இவர் தற்போது டாடா என்ற படத்தின் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடித்து வருகிறார். இப்படத்தை கணேஷ் பாபு இயக்கி வருகிறார். மேலும் ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ் உள்பட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘டாடா’ படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மகனே என் கண்மணி என்ற இப்பாடலை சத்தியநாராயணன், ஜென் மார்ட்டின், மாரியம்மாள் மற்றும் பிரார்த்தனா ஸ்ரீராம் ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடல் தற்போது வைரலாகி வருகிறது.