யாழில் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்

எரிபொருள் வழங்ககோரி பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று காலை யாழ்.இந்து மகளிர் கல்லூரி முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை வினாத்தாள் திருத்த பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களே இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

தாம் யாழ்ப்பாணத்தின் தூர இடங்களில் இருந்து வந்து யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டுவருவதாக கூறிய அவர்கள், தமக்கான எரிபொருள் கிடைக்காமையால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்தனர்.

எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் தமக்கான எரிபொருளை பெற்றுத் தருவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.