ரஷ்யாவிடம் ரகசியமாக உதவி கோரும் அமெரிக்கா

ரஷ்யாவிடமிருந்து அதிகளவிலான வேளாண் உரங்களை வாங்க அமெரிக்க நிறுவனங்களை அந்நாட்டு அரசு ஊக்குவித்து வருவதாக ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

ரஷ்யா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்ட போதிலும், நெல் மற்றும் உரங்கள் ஏற்றுமதிக்கு தடையிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது.

இதனை பயன்படுத்தி, ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் அதிகளவிலான உரங்களை வாங்க அமெரிக்க அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது.

இச்சூழலில் அதிகரித்து வரும் உலகளாவிய உணவு பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.