யாழில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

யாழ் பகுதியில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்துள்ளதால் அங்கு சற்று பதற்ற நிலை நிலவியது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – கோண்டாவில் இடம்பெற்றுள்ளது,

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வாகனத் திருத்துமிடத்தில் மோட்டார் சைக்கிளின் பாகம் ஒன்று மின்சாரம் மூலம் ஒட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது தீப்பற்றியுள்ளது.

இதனையடுத்து வாகன திருத்துமிடத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்தபோதும் மோட்டார் சைக்கிளின் பெரும் பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.