கேப்டன் விஜயகாந்த் நடித்து வெளிவந்த ரமணா படத்தின் முழு வசூல்.!!

ரமணா
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ரமணா.

விஜயகாந்த் ஹீரோவாக நடித்து வெளிவந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.

இப்படத்தில் விஜயகாந்துடன் இணைந்து சிம்ரன், விஜயன், யோகி சேது, அஷிமா, முகேஷி ரிஷி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

நடிகர் விஜயகாந்தின் திரைவாழ்க்கையில் ரசிகர்களால் மறக்க முடியாத படங்களில் ஒன்றாகும் ரமணா.

முழு வசூல் விவரம்
இந்நிலையில், இப்படத்தின் முழு பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ரமணா படத்தின் முழு வசூல் மட்டுமே சுமார் ரூ. 34 கோடி என தெரிவிக்கின்றனர்.