விரதம் இருந்து சிவலிங்க பூஜை செய்யும் முறை

சிவலிங்கத்தையோ, சாளக்ராமம், வில்வப்பழம் ஆகியவற்றை பஞ்சாயதன பூஜை இல்லாமலும், விதிகள் அறியாமலும் மனத்தூய்மையோடு உள்ளன்பு கொண்டு வழிபாடு செய்தாலும் அதுகூட ஈஸ்வரப் ரீதியாக அமைகிறது.

சிந்தித்தால் சிறப்பான பலன்களைக் கொடுப்பவர் சிவபெருமான். எளிய முறையில் பலன் தரும் கணபதிபோல அவர் தகப்பனாரும் அப்படியே தருவார். ஒரு சமயம் பிரயைம் முடிந்து சிருஷ்டி தொடங்கும் காலத்தில் தேவர்கள் கயிலையை அடைந்து தாங்கள் எப்போதும் சக்தியோடு விளங்கும் இடத்தைத் தெரிவிக்கும்படி வேண்டினர் அதற்கு ஈசன்.

தேவர் பெருமக்களே! நான் எப்போதும் உங்களுக்காக லிங்க வடிவில் இருக்கிறேன். அதில் பிரதிஷ்டை, மந்திர உருவேற்றம் பூஜைகள் எதுவும் இல்லாமல் இருப்பினும் பக்தர்களைக் காப்பேன் என்று பதில் அளித்தார்.

சிவலிங்கத்தையோ, சாளக்ராமம், வில்வப்பழம் ஆகியவற்றை பஞ்சாயதன பூஜை இல்லாமலும், விதிகள் அறியாமலும் மனத்தூய்மையோடு உள்ளன்பு கொண்டு வழிபாடு செய்தாலும் அதுகூட ஈஸ்வரப் ரீதியாக அமைகிறது.

லிங்க மூர்த்தென சதாகாலம் விநாமந்த்ராதி சத்க்ரியாம் ப்ரஸன்னோ நிவசாம் ஏவ பக்தி பாஜாம் விமுக்தயே, என்று விவரிக்கிறது.

வராக புராணம், பதுமராஜம், வைரம், மரகதம் முதலிய ரத்தினங்களான லிங்க பூஜை நல்ல பலனைத் தரும் என்றும், பவிஷ்ய புராணம், மணி, விபூதி, பசுஞ்சாணம், மாவு, தாமிரம், வெண்கலம் இவற்றில் செய்த லிங்க ஆராதனை சிறந்தது என்றும், ஸ்படிக லிங்கம், செல்வம் கெடுத்து விருப்பங்களை அருளும் என்றும் பவிஷ்ய புராணம் கூறுவதை அறிதல் வேண்டும். எப்பொருளில் லிங்கம் செய்தாலும் புகஜக்கு உகந்ததாகும் என விஷ்ணு தர்மோத்தரம் சொல்கிறது.

பிருத்வி எனப்படும் மண்ணால் செய்த சிவலிங்கம் செய்து ஓராண்டு காலம் சிவமூலத்தால் வில்வம் கொண்டு வந்து வழிபடுபவன், நீண்ட ஆயுள், பலம், செல்வம், செல்வாக்கு பெறுவான், நன் மக்கட் பேறுடன் சுகமாக வாழ்வான், கோருகின்ற வரங்களும் பெறுவான் என்கிறது தைத்தரிய கோசம் என்ற நூல்.
சின்ன பூஜையால் மன திருப்பதி அடைந்து பேரருள் தருபவர் ஈசன் என்பதால் வேதநூல்கள் இவரை ஆகதோஷி என்று போற்றுகின்றன.

சிவராத்திரி பூஜை விதி… மகா சிவராத்திரி நாளில் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு பகலில் கனி, கிழங்கு, பால் உண்டு இரவில் கண் விழித்து சுத்த உபவாசம் கடைப்பிடித்து நான்கு காலம் சிவாலய தரிசனம் செய்து சிவபுராணம், பஞ்சபுராணம் படித்து சிவதாம் ஜெபம் செய்து, சிவலிங்க திருமேனியை வில்வதளங்களால் அர்ச்சனை செய்து முறையாக பக்தியுடன் வழிபடல் வேண்டும்.

சிவபெருமானை பூஜையால் தான் மகிழச் செய்ய முடியும். பெருமானை விரதம் செய்து தான் மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்று பல தீபிகா நூல் உரைத்துள்ளது.
பூஜைம் சம்போ- ஸ்ரீபதே சக்விரதானிச என்பது வாக்கு.

பத்தாயிரம் ஆண்டுகள் ஆசார நியமத்துடன் கங்கையில் குளித்த தூய்மையை வில்வதளத்தால் சிவனை அர்ச்சனை செய்து பெறலாம் என்பது சிவபுராணத்தின் கூற்று. ஆதிசங்கர பகவத் பாதர், சுத்தநீர் அபிஷேகம்-பத்து வகை பாவங்களையும், பால் அபிஷேகம்-நூறு பாவங்களையும், தயிர்-ஆயிரம் பாவங்களையும், நெல்-பத்தாயிரம் பாவங்களையும், இளநீர்-ஒரு லட்சம் கோடி பாவங்களையும், சந்தனம்-சகல பாவங்களையும் அகற்றும் என்றார்.

தைலம்-பக்தியையும், பழங்கள்-மக்கள் வசீகரத்தையும், பஞ்சாமிர்தம்-ஆயுளையும், பால்-நல்ல குணத்தையும், தயிர்-உடல் நலத்தையும், தேன்-இசைத் திறனையும், இளநீர்-குழந்தைப் பேறையும், விபூதி-நல்லறிவையும், சந்தனம்-சுகவாழ்வையும், பஞ்சகவ்யம்-கல்வித் திறனையும், பன்னீர்-புகழையும் தரும் என தர்ம சாத்திரங்கள் கூறுகின்றன.

இறைவனுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம், மலர், வில்வமாலை, சந்தனம் சாற்றி சிவார்ச்சனை செய்யும் போது ருத்ராட்சம் அணிந்து விபூதி தரித்து ஓம் நமச்சிவாய மந்திரத்துடன் சிவ பதிகங்களை ஓதி நலன்களை பல பெற வேண்டும்.

மகா சிவராத்திரி அன்று இரவு கண் விழிப்பதாகக் கூறியபடி இளைய தலைமுறையினர் திரைப்படங்களைக் காணச் செல்கின்றனர். அந்த நாளில் முடிந்த அளவு தவிர்த்து மறுதினம் செல்லலாமே! சிவராத்திரி விரத நாளில் ஐம்புலன்களையும் அடக்கிச் சிவ சிந்தனையில் ஈடுபட்டால் உங்கள் ஆயுளும், ஆரோக்கியமும் கூடும். வாழ்நாள் இனிதாகும். ஓம் நமசிவாய.
இசையும் பொருளுமாய் விளங்கிடும் தெய்வம்
கண்ணின் மணியாய்க் காத்திடும் தெய்வம்
கயிலை என்னும் மலையில் வாழும் தெய்வம்
உரைகள் கடந்த உயர்ந்திடும் தெய்வம்
அதுநான் லிங்கத்துள் உரையும் நமசிவாயம்.