களத்திர தோஷம் என்றால் என்ன?

சிலருக்கு திருமணத்தை நடத்தி தராமல் தோஷத்தை உமிழும் இந்த கருணையற்ற களத்திர தோஷம் பலருக்கு திருமணம் நடந்த பிறகு சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

திருமணம் தொடர்பான பாவகங்களான 1 ,2,7,8 ஆகிய ஸ்தானங்களில் அசுப கிரகங்களான சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது அமர்வது அல்லது ஏழாம் இடத்தில் நீசம், அஸ்தமனம் அடைந்த கிரகங்கள் அமர்வதாகும்.

இந்த தோஷ அமைப்பை பெற்றவர்களுக்கு தாமதத் திருமணம் அல்லது திருமணமே நடக்காத நிலை இருக்கும் அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாக விருப்பமில்லாதவருடன் வாழ்வது.

அல்லது சமமான அழகு, படிப்பு, அந்தஸ்து, படிப்பறிவு இல்லாதவர்களுடன் வாழ்வது அல்லது ஒரே வீட்டில் சதா சண்டை சச்சரவுடன் வாழ்வது அல்லது ஒருவர் குறையை மற்றவர் பெரிதுபடுத்தி நிம்மதியை இழப்பது அல்லது தம்பதிகள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்வது அல்லது தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக கருத்து வேறுபாடு இல்லாமல் பிரிந்து வாழ்வது அல்லது கருத்து வேறுபாடு காரணமாக நிரந்தரமாக பிரிந்து வாழ்வது அல்லது விவாகரத்து பெறுவது அல்லது தம்பதிகளில் ஒருவர் மட்டும் இறந்து விடுவது போன்ற ஏதாவது இடரைத் தந்து கொண்டே இருக்கும்.

உளவியல் ரீதியாக ஆயிரம் ஜாதகத்தை ஆய்விற்கு எடுத்துக் கொண்டால் 900 ஜாதகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கவே செய்யும். பலருக்கு களத்திர தோஷ பாதிப்பு இருந்தாலும் களத்திர ஸ்தானம் எனும் 7மிட அதிபதி நின்ற நிலைக்கு ஏற்பவே திருமண வாழ்க்கை அமையும். 7-ம் அதிபதியை கருத்தில் கொண்டு களத்திர தோஷ பாதிப்பை முடிவு செய்ய வேண்டும். ஏழாம் அதிபதி ஜாதகத்தில் கெட்டால், திருமணம் கேள்விக்குறியாகும் அல்லது சில நேரங்களில் மிக மிக தாமதமாக திருமணம் அமையும்.

களத்திர தோஷம் உள்ள ஆண் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும் சுக்ரனும் வலுப்பெற்றால் திருமண வாழ்க்கை பாதிக்காது.
அதேபோல் களத்திர தோஷம் உள்ள பெண் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும் செவ்வாயும் வலுப்பெற்றால் திருமண வாழ்க்கை பாதிக்காது. இதுவே ஜோதிட சூட்சமம். இந்த சூட்சமத்தை பின்பற்றாமல் 7-ம் இடத்தில் நிற்கும் அசுப கிரகங்களை மையப்படுத்தி களத்திர தோஷம் என பலரின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவது நியாயமா? ஏழாம் அதிபதியும் திருமண வாழ்க்கைக்கு முக்கியம்.

மேலும் களத்திர தோஷம் பெண்ணிற்கு மட்டும் பார்க்க வேண்டும். ஆண்களுக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.