பதவி விலகுவது குறித்து ஜனாதிபதி கூறிய விடயம்

தான் ஒருபோதும் பதவி விலகப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

அமைச்சர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்ததாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்ற தன்னால் மட்டுமே முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் திறன் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எனவேதான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரை புதிய பிரதமராக நியமித்து நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சு பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்தார். இதேவேளை, திறமையானவர்களை அமைச்சரவைக்கு இணைத்துக் கொள்வதாகவும் அடுத்த வாரத்திற்குள் அமைச்சரவை நியமனம் இறுதி செய்யப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்தார்.

‘அமைச்சரவை நியமனம் முடிவடைந்ததும் நான் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவேன் என சில ஊடகங்களில் செய்திகளை பார்த்திருக்கிறேன். எனினும், நான் ஒருபோதும் பதவி விலக மாட்டேன். ‘; ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி-பிரதமர்-அமைச்சரவை ஒன்றிணைந்தால் நாட்டின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.