.யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து யாழ் கொட்டடி நாவாந்துறை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக அறியவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 31 வயதுடைய நவரட்ணராஜா சங்கீத் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேசம்யம் உயிரிழந்தவருடன் பயணித்தவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.