மன்னாரில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்றவர்கள் கைது!

மன்னாரில் இருந்து இந்தியாவுக்குக் கடத்த முயன்ற சுமார் 02 கிலோ தங்கம் கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதோடு 03 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடற்பரப்பில் பயணித்த சந்தேகத்துக்கிடமான படகை வழிமறித்த கடற்படையினர் படகைச் சோதனையிட்ட போது மேற்படி தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டது தங்கம்
இவ்வாறு மீட்கப்பட்ட தங்கம் ஒரு கிலோவும் 960 கிராமும் எடை கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேலதிக சட்ட நடவடிக்கைக்காகச் சந்தேகநபர்கள் தங்கத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.