தனியாருக்கு எரிபொருள் இறக்குமதிக்கு அனுமதி!

எரிசக்தி அமைச்சகம் அனைத்து தனியார் எரிபொருள் முகாமையாளர்களுக்கும், தொழிற்சாலைகளுக்கு டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் தேவைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் தொழிற்சாலைகள் தங்கள் ஜெனரேட்டர்கள் மற்றும் இயந்திரங்களை இயக்க முடியும் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மொத்தமாக எரிபொருளை வழங்கும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீதான சுமை குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி சார்ந்த கைத்தொழில்களுக்கு தனித்தனியாக எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் கடந்த மாதம் வழங்கப்பட்ட அங்கீகாரம் ஏனைய தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.