யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் இன்று (23) இடம்பெற்றுள்ளது

குறித்த பகுதியில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த மினிவான், வீதியோரமாக நின்ற மோட்டார் சைக்கிள் என்பவற்றை மோதி விபத்துக்கு உள்ளானது.

இவ்வாறு இடம்பெற்ற விபத்தின் போது இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.