ஜனாதிபதிக்கு நன்றி கூறிய யாழ்ப்பாண மக்கள்

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக மக்கள் எரிபொருளுக்காக காத்திருக்கும் நிலையில் நபர் ஒருவர் ஜனாதிபதி கோட்டபாயவுக்கு நன்றி கூறிய முகநூல் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அவரது பதிவில்,

கனம் ராஜபக்சகுடும்பத்திற்கு

யாழ்பாணிஸ் ஆகிய நாங்கள் உங்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக உங்களிற்கெதிராக #go_gotta போன்றஎந்தவொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.

இதற்கு நன்றிகடனாக நீங்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக மற்ற மாவட்டங்களைப் போல் அல்லாமல் ஓரளவேனும் எரிபொருட்களை கிடைக்க செய்தீர்கள் இதற்காக ராஜபக்ச குடும்பத்திற்கு தமிழ்மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என குறித்த நபர் பதிவிட்டுள்ளார்.