உக்ரைன் ரஷ்யா தொடர்பில் ஆதாரங்களை சேகரிக்கும் அமெரிக்கா

உக்ரைனில் ரஷ்யா நடத்திய போர்க்குற்றங்கள் மற்றும் பிற அட்டூழியங்கள் பற்றிய ஆதாரங்களை திரட்டி ஆய்வு செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

அந்தவகையில் புதிய திட்டத்தை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் முன்னெடுக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

படையெடுப்பின் போது ரஷ்யப் படைகள் மேற்கொண்ட விடயங்கள் தொடர்பான ஆதாரங்களை ஆவணப்படுத்துதல், சரிபார்த்தல் மற்றும் கண்காணிப்புக்கள் இடம்பெறும் என அறிவித்துள்ளது.