ஸ்மார்ட் டி.வி. மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கும் சாம்சங்

சாம்சங் நிறுவனம் பிக் டி.வி. டேஸ் பெயரில் நடத்தும் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட் டி.வி. மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது

சாம்சங் இந்தியா நிறுவனம் “சாம்சங் பிக் டி.வி. டேஸ்” பெயரில் ஸ்மார்ட் டி.வி. மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. இந்த விற்பனையில் பிரீமியம், பெரிய ஸ்கிரீன் நியோ QLED 8K, நியோ QLED, QLED, தி ஃபிரேம் மற்றும் க்ரிஸ்டல் 4K UHD டி.வி. மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.

இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங் நிறுவனத்தின் ஹை-எண்ட் டி.வி. மாடல்களை வாங்கும் போது சிறந்த டீல்கள் மற்றும் நிச்சய பரிசுகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

– 75 இன்ச் அல்லது அதிக இன்ச் கொண்ட சாம்சங் நியோ QLED 8K டி.வி. வாங்குவோருக்கு ரூ. 1 லட்சத்து 31 ஆயிரத்து 999 மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி S22 அல்ட்ரா ஸ்மார்ட்போன்

– சாம்சங் நியோ QLED, QLED டி.வி.க்கள், 75 இன்ச் ஃபிரேம் டி.வி.க்கள், க்ரிஸ்டல் 4K UHD டி.வி. 75 இன்ச் மற்றும் அதிக இன்ச் மாடல்களை வாங்குவோருக்கு சாம்சங் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போன்

– சாம்சங் 50 இன்ச் நியோ QLED டி.வி., 50 இன்ச் அல்லது 55 இன்ச் QLED டி.வி. வாங்கும் போது ரூ. 8 ஆயிரத்து 900 மதிப்புள்ள ஸ்லிம்ஃபிட் கேமரா பரிசு

– சாம்சங் 50 இன்ச் மற்றும் அதிக இன்ச் மாடல்களை வாங்கும் போது 20 சதவீதம் கேஷ்பேக், மிக எளிய மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது

– சாம்சங் QLED டி.வி. மாடல்களுக்கு 10 ஆண்டுகள் நோ ஸ்கிரீன் பர்ன் இன் வாரண்டி, தேர்வு செய்யப்பட்ட சாம்சங் டி.வி. மாடல்களுக்கு மூன்று ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது.

சாம்சங் அறிவித்து இருக்கும் பிக் டி.வி. டேஸ் சிறப்பு விற்பனை மே 14 ஆம் தேதி துவங்கி ஜூன் 30, 2022 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இவை நாடு முழுக்க முன்னணி விற்பனை மையங்களில் கிடைக்கிறது.