மைத்ரி தலைமையில் நிகழ்ந்த விசேட சந்திப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெறுகின்றது.

பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதா அல்லது இந்த விவகாரத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பன குறித்து இதன்போது ஆராயப்படுகின்றது.

மத்திய குழுவால் எடுக்கப்படும் முடிவு குறித்து நாடாளுமன்றக்குழு மற்றும் நிறைவேற்றுக்குழுவில் ஆராயப்பட்டு இறுதியான தீர்மானம் அறிவிக்கப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.