பெருங்குடல் புற்றுநோய் வர காரணம் என்ன?

உலக அளவில் மிகப்பெரிய நோய் ஒன்று வயதி வித்தியாசமின்றி பாதிப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தி வருகிறது என்றால் அது புற்றுநோய் தான்.

புற்றுநோயில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. அதிலு முக்கியமாக பெருங்குடல் புற்றுநோய் இருக்கிறது.

பெருங்குடல் புற்றுநோய் என்பது மலக்குடலைப் பாதிக்கும் ஒரு வகையான புற்றுநோய் ஆகும். இந்த வகையான புற்றுநோய் அனைத்து வயதினர்க்கும் வரக்கூடும்.

இதில் பெரும்பாலும், பாதிக்கப்படுபவர்கள் வயது ஆனவர்களே. இந்த புற்றுநோயை சரிசெய்ய ஹீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, நோயெதிர்ப்பு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை போன்ற முறைகள் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.

காரணங்கள்
பெருங்குடலில் செல்கள் குவியும் போது கட்டிகள் உருவாவதால் பெருங்குடல் புற்றுநோய் உருவாகிறது.

இந்த கட்டிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், பெருங்குடல் புற்றுநோயின் வளர்ச்சிக்கு வழிவகுத்துவிடும்.

ஒருவருக்கு பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான முக்கியகாரணமே உடல் பருமன், ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, மரபியல் காரணங்கள், முதுமை, சர்க்கரை நோய் அல்லது புகை, மது பழக்கம் போன்றவை தான்.

அறிகுறிகள்
* சோர்வு

*ஆரோக்கியமற்ற எடை இழப்பு

* மலக்குடலில் இரத்தப்போக்கு

* தொடர்ச்சியான குடல் பிரச்சனைகள்

* அடிவயிற்றில் தொடர்ச்சியான அசௌகரியம்

தடுக்கும் வழிமுறைகள்
சீரான உணவுகளை உட்கொள்வதால், பல்வேறு பிரச்சினைகளை சரிசெய்யும்.

ஆரோக்கியமான உடலை பராமரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும்,

நார்ச்சத்து வைட்டமின்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி

உடலுக்கு எந்தவிதமான வேலையையும் கொடுக்காமல் இருந்தால்,

அது பெருங்குடல் புற்றுநோய் போன்ற பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைக்கு வழிவகுக்கும்.

அன்றாடம் 30 நிமிடம் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

புகை மதுவை கைவிடவும்

புகைப் பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற பழக்கங்கள் இதய நோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் எலும்பு பிரச்சனைகள் ஏற்படுத்தும்.

நீங்கள் நீண்ட நாட்கள் நோயின்றி வாழ நினைத்தால், இந்த கெட்ட பழக்கங்களை கைவிடவேண்டும்.

எடையை கட்டுக்குள் வைக்கவேண்டும்

பெருங்குடல் புற்றுநோய் எடை பராமரிப்பு முக்கிய காரணமாக அமைகிறது.

இதனால், பெருங்குடல் புற்றுநோய் வரக்கூடாது என்றால், உடலை கட்டுக்குள் வைத்து,

உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

சிகிச்சை

பெருங்குடல் புற்றுநோய்க்கு உரிய சிகிச்சையாக அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி போன்ற பன்மடங்கு அணுகுமுறைகளுடன் அளிக்கப்படும்.

சிகிச்சைக்கு முன் முக்கிய விஷயம் என்னவென்றால், சிகிச்சையானது பெரும்பாலும் புற்றுநோய் இருக்குமிடம் , அதன் ஸ்டேஜ் மற்றும் பிற உடல்நலக் பிரச்சனைகள் பொறுத்ததே…

சாப்பிட வேண்டிய உணவு முறைகள்

மாதுளை பெருங்குடல் புற்றுநோய்க்கு முக்கியமாக மாதுளை சாறு சாப்பிடுவது பிரச்சினைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.

இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் கூட பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும் தொடர்ந்து தினந்தோறும் சில மாதங்கள் மாதுளை சாறு கொடுத்து வந்தார்கள்.

அப்படி தினந்தோறும் சாப்பிட்டு வந்தவர்களில், 87 சதவீதம் அளவுக்கு குணப்படுத்தப்பட்டு இருந்தது கண்றியப்பட்டது.

பூண்டு

பூண்டு ஆனது பல வயிறு சம்பந்தபட்ட நோய்களுக்கு தீர்வாக இருக்கிறது. குறிப்பாக இதில், சல்யூரிக் அமிலம் பூண்டில் அதிகமாக இருக்கிறது.

இதில், அல்லில் சல்பைடு புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது. இவை, புற்றுநோய் பாதிப்பிலிருந்து தடுப்பதோடு மட்டுமின்றி மற்ற நோய்த் தொற்றுக்கள், கிருமி தொற்றுக்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

வெங்காயம்

வெங்காயத்தில், பல புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் கலவை அடங்கியிருக்கிறது. நம்முடைய உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது.

இவை, ஒருவகை அல்லியம் நிறைந்த தாவரம் என்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கவும் புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கவும் உதவுகிறது.

ஒமோகா உணவுகள்

ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் ரத்த நாளங்கள் மற்றும் செல்களில் கிருமித் தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டவை.

மீன் மற்றும் கடல் உணவுகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கின்றன. அவற்றோடு அவகேடோ மற்றும் ஆலிவ் எண்ணெயில் அதிக அளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன.

நட்ஸ்

நட்ஸ் பொறுத்தவரை ஓட்ஸ், பார்லி, சம்பா அரிசி ஆகியவற்றில் நார்ச்சத்துக்கள் மிக அதிகம். இவை, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவற்றில் அதிக அளவு புரதங்களும் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு அமிலங்களும் நிறைந்திருக்கின்றன. தினசரி உணவில் சேர்த்து வந்தால் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க முடியும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள்

இதற்கான சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் பெருங்குடல் புற்றுநோய் வளர்வதற்கான ஆபத்து பின்வரும் கரணங்களினால் அதிகமாக இருக்கலாம்.

50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஏற்படும்.

  1. பெருங்குடல் புற்றுநோயானது குடும்பத்தில் ஒரு தனிநபருக்கு இருக்கும் போது மற்றவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு.

  2. உடல் பருமனான மக்கள்.

  3. சிகரெட் புகைப்பவர்கள். மது அருந்துபவர்கள். சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்பவர்கள்.

  4. நார் சத்து குறைந்த உணவு பழக்கத்தை மேற்கொள்பவர்கள்.

  5. உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறையை கொண்டவர்கள்.

  6. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் நோய்த்தடுப்பு மருந்துகளை உட்கொண்ட மக்கள்.

  7. இன்சுலின் எதிர்ப்பு கொண்ட நீரிழிவு நோய் மற்றும் ஹெச்.ஐ.வி தொற்று போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்.

  8. பித்தப்பை நீக்கம் செய்த வரலாற்றை கொண்டவர்கள்.

  9. இரத்தக் குழாய் சார்ந்த இதய நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள்.

இந்த ஆபத்து விளைவிக்கும் காரணிகள் இருந்தாலே உங்களுக்கு புற்றுநோய் உருவாகிவிடும் என்பது இல்லை.. இருப்பினும், இத்தகைய ஆபத்து காரணிகள், நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பினை அதிகரிக்க செய்கின்றன.

உடலின் செல்களில் புற்று நோயின் தாக்கங்கள்

உடல் உறுப்புக்களில் உயிரணுக்களின் மீது அபரிமிதமான வளர்ச்சியடையும் உடலில் உள்ள மற்ற உறுப்புகள் மீது வேகமாக பரவும் குணமுடையது.

அதாவது உடலில் நுரையீரல், கல்லீரல் உள்பட மற்ற பாகங்களுக்குப் பரவி அவற்றையும் செயலிழக்கச் செய்வது.

உடலானது தனது சுயக் கட்டுப்பாட்டை இழந்து விடும் அளவுக்கு வளர்ந்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடுவது ஆகியன.

புற்றுநோயைப் பொருத்தவரை நோய் வந்தவுடன் உடனடியாகக் கண்டுபிடித்து சிகிச்சை செய்ய வேண்டும்,

இரண்டாவதாக முறையான சிகிச்சை தரும் மையங்களுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக செய்யக் கூடிய சிகிச்சை தொடர் சிகிச்சையாக இருப்பதும் அவசியமாகும். இந்த மூன்றையும் முறையாகச் செய்துகொண்டால் புற்றுநோய் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.