நாட்டின் நிர்வாகம் தற்காலிகமாக இராணுவத்திடம் !

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகள் அதிகரிக்குமாக இருந்தால் நிர்வாக அதிகாரம் தற்காலிகமாக சில காலத்திற்கு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக பல்வேறு தரப்பினரும் குறிப்பாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துமாறு முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.