ராஜபக்ச குடும்பத்தவரின் இன்னோர் வீடும் தீக்கிரைக்காக்ப்பட்டது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

செவனகல கிரிப்பன் அர பிரதேசத்தில் உள்ள சஷீந்திரவுக்கு சொந்தமான வீடே நேற்று இரவு ஒரு குழுவினரால் இவ்வாறு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் வீட்டில் இருந்த தளபாடங்களும் தீக்கிரையாகியுள்ளன.

குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பு நிலைமைகள் பொலிஸாரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இன்று காலை செவனகல பிரதேசத்தில் மிகவும் அமைதியான சூழல் நிலவியது.