கனடாவில் நபரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்

கனடா – மிசிசாகா பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு லோட்டோ 6/49 லாட்டரி மூலம் பெருந்தொகை பணப்பரிசு கிடைத்துள்ளது.

ஜூலியன் ரிச்சர்ட்ஸ்(Julian Richards) என்பவருக்கே சுமார் 7 மில்லியன் டொலர் பணப்பரிசு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 29 அன்று நடந்த குலுக்கலின் போது $7,102,956.40 பணப்பரிசை அவர் வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் பணப்பரிசை வென்றபோது தனது மனதில் தோன்றிய முதல் விஷயம் என்னவென்றால், தனது குடும்பத்திற்கு எப்படி உதவப் போகின்றேன் என்பதுதான்.

“எனது குழந்தைகளுக்கு ரியல் எஸ்டேட் வாங்க விரும்புகிறேன், அதனால் நாங்கள் ஒன்றாக இருக்க முடியும். என் பேரக்குழந்தைகள் என்னுடன் நெருக்கமாக வளர்வதைப் பார்க்க விரும்புகிறேன், ”என்று அவர் கூறினார்.

நான் இந்த வெற்றியில் சிலவற்றை என் அம்மாவுடன் பகிர்ந்து கொள்கிறேன், பயணம் செய்ய சிறிது நேரம் ஒதுக்குவேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.