போதையில் ஆணுக்கு தாலி கட்டிய ஆண்..!!

இளைஞர் குடிபோதையில் ஆண் ஒருவருக்கு தாலிக்கட்டிய சுவாரஷ்ய சம்பவம் தெலுங்காக மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் ஜோகிபேட் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இவர் அவ்வப்போது அருகில் உள்ள டுமாபால்பேட் பகுதியில் உள்ள ஒரு மதுபான கடைக்கு சென்று குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

அங்கு 21வயதான இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஏப் 1ம் தேதி இருவரும் மதுகடையில் அதிகமாக குடித்துள்ளனர். இந்நிலையில் குடி போதையில் இருவரும ஒரினச் சேர்க்கை திருமணம் குறித்து பேசியுள்ளனர்.

இருவரும் குடிபோதையிலிருந்த நிலையில் இருவரும் அப்பகுதியில் உள்ள ஜோகிநாத் கோவிலுக்கு சென்று 22 வயது ஆட்டோ டிரைவர், 21 வயது இளைஞரின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார்.

பின்னர் இருவரும் தனித்தனியே அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் சில நாட்கள் கழித்து ஜோகிபேட் பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவரின்வீட்டிற்கு வந்த 21 வயது இளைஞர் ஆட்டோ டிரைவரின் பெற்றோரிடம் அவருக்கும், அவர்களது மகனுக்கும் நடந்த திருமணம் குறித்து கூறி இனி தான் தனது கணவருடன் தான் வாழ்வேன் என சொல்லியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவரின் பெற்றோர் 21 வயது இளைஞருடன் சண்டை போட்டு அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டனர்.

இதனால் அந்த இளைஞர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதில் அந்த 21 வயது இளைஞர் தன்னை தனது பெற்றோர் வீட்டை விட்டு துரத்திவிட்டதால் தனக்கு வாழ வழியில்லை அதனால் இனி தான் தனியாக வாழ ரூ1 லட்சம் பணம் வேண்டும் என கேட்டுள்ளார்.

பின்னர் இரு குடும்பத்தாரும் தனியாக பேசி ரூ10 ஆயிரம் பணத்தை கொடுத்து ஒருவருக்கொருவர் சம்மந்தம் இல்லை என எழுதி வாங்கிக்கொண்டனர். குடி போதையில் ஆண் ஆணிற்கே தாலி கட்டிய சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.