ஐபிஎல் போட்டியில் சாதனை படைத்த ரோகித் சர்மா

ஐபிஎல் போட்டியில், கடந்த நாளில் மும்பை அணி பஞ்சாப் அணியுடன் மோதியது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது.

199 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களம்கண்ட மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ச்சியாக மும்பை அணியும் 5வது தோல்வியை தழுவியுள்ளது. ப்ளே ஆப் வாய்ப்பும் ஊசலில் உள்ளது. இந்த சோதனையிலும், ரோகித் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.