எடை குறைத்தால் போனஸ் டாஸ்க் கொடுத்த நிறுவனம்

உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று ஜிரோதா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜிரோதா நிறுவனம் தங்களது ஊழியர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த சுகாதார திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இதுகுறித்து ஜிரோதா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிதின் காமத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘உடல் நிறை குறியீட்டெண் (BMI) 25-க்கும் குறைவாக உள்ளவர்களுக்கு போனஸாக அரை மாத ஊதியம் வழங்கப்படும்.

எங்களது ஊழியர்களின் சராசரி பிஎம்ஐ 25.3 ஆக உள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்குள் ஊழியர்கள் தங்களது சராசரி உடல் நிறை குறியீட்டு எண்ணை 24-க்கு கீழ் கொண்டு வந்தால், நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் போனஸாக மேலும் அரை மாதம் ஊதியம் வழங்கப்படும்’ என குறிப்பிட்டுள்ளார்.

யார் வெற்றியாளர்
மேலும், இருப்பதிலே குறைவான உடல் நிறை குறியீட்டு எண்ணை கொண்டவர்களோ அல்லது அதிகளவில் உடல் நிறை குறியீட்டு எண்ணில் மாற்றம் கண்டவர்களோ வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற முயற்சியை உங்கள் நிறுவனத்திலும் முன்னெடுக்க நினைத்தால், கமெண்டுகளில் தெரியப்படுத்துங்கள் என நிதின் காமத் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.