பாம்புடன் செல்லமாக விளையாடும் சிறுமி!

பாம்புடன் சிறுமி ஒருவர் செல்லமாக கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாம்பை பார்த்து பலரும் நடுங்கும் போது, அரைனா என்ற சிறுமி பாம்புடன் விளையாடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

சிறு வயது முதலே பாம்புடன் பழகும் அரைனா, பெரிய ரக மலைப்பாம்புடன் விளையாடுகிறார்.

இதுதொடர்பான வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட லைக்ஸ்கள் குவிந்து வருகிறது, இந்த வீடியோவை தற்போது வரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.