கனடாவில் எரிவாயு விலை மேலும் அதிகரிப்பு!

கனடாவில் எரிவாயு விலை அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் வரலாறு காணாத அளவு எரிவாயுவின் விலைகள் அதிகரித்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 90 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

இதனால் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. எரிபொருள் ஒரு லீற்றரின் விலை சராசரியாக 151.6 சதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டின் பின்னர் இவ்வாறு விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.