கனேடிய பிரதமருக்கு கொரோனோ தொற்று உறுதி!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்ட பதிவில், கொரோனா பாதிப்பு தமக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் தாம் நலமுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, இந்த வாரம் முழுமையும் தாம் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற இருப்பதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தமது பிள்ளைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனிமைப்படுத்திக்கொண்டார் என்பதுடன், வீட்டில் இருந்தபடியே பணியாற்றியும் வந்துள்ளார்.