அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கடும் மன வருத்தத்தில்… மைத்திரி..!!

அரசாங்கம் தமது யோசனைகளை கண்டு கொள்வதில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்திற்குள் அங்கம் வகிக்கும் கட்சி என்ற வகையில் அரசாங்கத்திற்குள் இந்த அனைத்துப் பிரச்சினைகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடியுள்ளோம்.

தனிப்பட்ட ரீதியில் பேசியிருக்கின்றோம், கட்சி என்ற ரீதியிலும், நாடாளுமன்றக் குழுக் கூட்டங்களிலும் இது பற்றிய கருத்துக்களை வாய்மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் முன்வைத்துள்ளோம்.

பொருளாதாரப் பிரச்சினை, ஆசிரியர் சம்பளப் பிரச்சினை, உரப் பிரச்சினை, விவசாயத்துறை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி பேசியிருக்கின்றோம்.

இந்த அனைத்து விடயங்கள் பற்றிய யோசனைகள், பரிந்துரைகள் நாம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம்.

எனினும் துரதிஸ்டவசமாக நாம் சொல்லும் எதனையும் அரசாங்கம் கண்டுகொள்வதில்லை. அதுவே தற்போதைய பிரச்சினைகளுக்கான காரணம் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.