விடாமல் தொல்லைகொடுத்த இளைஞனை நிர்வாணப்படுத்தி தாக்கிய தம்பதியினர்

திருமணமான தம்பதியால் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டார். இந்த சம்பவம் சியம்பலாண்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சியம்பலாண்டுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு தம்பதிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

குறித்த இளைஞன் தனது மனைவிக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு தொந்தரவு செய்ததால் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.