தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி விலகியுள்ளார்

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் பணிகளில் இருந்து ஷேர்மிளா ராஜபக்ஷ விலகியுள்ளார்.

இது தொடர்பில் அவர், வனஜீவராசிகள் அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

ஜனவரி 20 ஆம் திகதி எழுதிய கடிதத்தில், தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் பணியாளர்களின் தன்னிச்சையான தொழிற்சங்க நடவடிக்கைகள் விலங்கினச்சாலையில் உள்ள விலங்குகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில், 14 நாட்களுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மீண்டும் பணியைத் தொடங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இல்லையெனில், தமது பதவியை விட்டு விலகப்போவதாக அவர் எச்சரித்துள்ளார்.